வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; அஜய் ராய் போட்டி

டெல்லி: வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை மோடியை எதிர்த்து அஜய் ராய் போட்டியிடுகிறார் என காங்கிரஸ் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. உபி.யில் 7வது கட்டமாக மே 19ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது.  உபி.யில் உள்ள வாரணாசி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். அவர் நாளை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது.

கடந்த முறை வாரணாசியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை சுமார் மூன்றே முக்கால் லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என தகவல் வெளியாகியது.

பிரியங்கா காந்தி பேட்டி

இது குறித்து பேட்டியளித்த பிரியங்கா காந்தி; “நான் இதை தான் மீண்டும் மீண்டும் கூறுவேன். கட்சித் தலைமை என்னை என்ன செய்ய சொல்கிறதோ அதை தான் நான் செய்வேன். கட்சி விரும்பினால் வாரணாசியில் போட்டியிடுவேன். மக்கள் துன்புறுத்தப்பட்டதை உணர்கிறார்கள். அவர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்” என்றார்.

இந்நிலையில் வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியானதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; மோடியை எதிர்த்து அஜய் ராய் போட்டியிடுகிறார் என காங்கிரஸ் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. மோடியை எதிர்த்து பிரியங்கா களமிறக்கப்படுவாரா என்ற சந்தேகத்துக்கு காங்கிரஸ் முடிவுகட்டியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: