×

பூமியைப் போல செவ்வாய் கிரகத்திலும் ஏற்பட்ட நிலநடுக்கம்..: நாசா விண்வெளி மையம் ஆடியோ வெளியீடு!

வாஷிங்டன்: பூமியில் நிலநடுக்கம் ஏற்படுவதைப் போல், முதன்முறையாக செவ்வாய் கிரகத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான ஆடியோவை நாசா விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்ய கடந்த 6 மாதங்களுக்கு முன் இன்சைட் விண்கலன் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது செவ்வாயின் நிலப்பரப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதில் கிரகங்களின் வெப்பநிலையை கணக்கிடும் கருவி, சுழற்சி மற்றும் நிலத்தின் செயல்பாடு குறித்தும் கண்டறிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், செவ்வாய்கிரகத்தில் ஏற்பட்ட நிலஅதிர்வை இன்சைட் விண்கலன் ஆய்வு செய்து முதல் அதிர்வை பதிவு செய்துள்ளதாகவும் கலிபோர்னியா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 6ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்த விண்கலத்தில் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கம் செவ்வாயின் உட்பகுதியில் ஏற்படுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மார்ஸ்குவேக் என அழைக்கப்படும் இந்த நில அதிர்வு 2 அல்லது 2.5 ரிக்டர் அளவுகோலாக உள்ளது. செவ்வாய் கிரகத்தில் இது முதல்முறையாக ஏற்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் அதிர்வு ஏதுமில்லை என தெரிய வந்துள்ளது. மேலும் மார்ச் 14 மற்றும் ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கங்களின் தன்மை, அளவு மற்றும் விளைவுகள் குறித்து நாசா விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து பேசிய விஞ்ஞானிகள், இந்த சிக்னலை கேட்க நீண்ட மாதங்களாக காத்திருந்தோம். செவ்வாய் கிரகத்திலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதற்கு ஆதாரம் கிடைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளோம். அவை குறித்து ஆராய்ச்சி செய்த பிறகு விரிவான தகவல்களை வெளியிடுகிறோம் என்று கூறியுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Earthquake ,Earth ,Mars ,NASA Space Center , Mars planet, marsquake, NASA, audio, InSight
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்