தங்கம் பதக்கம் வெல்வதே என்னுடைய வாழ்நாள் கனவு,.. கனவு நிறைவேறியது: கோமதி மாரிமுத்து

தங்கம் பதக்கம் வெல்வதே என்னுடைய வாழ்நாள் கனவு என்றும் தற்போது கனவு நிறைவேறியது என்று ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து கூறியுள்ளார். 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. பதக்கம்வென்றதால் என்னுடைய சிறிய ஊர் முடிகண்டம் தற்போது வெளியே தெரிவது பெருமையாக உள்ளது என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.  தங்கப்பதக்கம் பெறும்போது தேசிய கீதம் இசைக்கையில் எனக்கு முகவும் சந்தோஷமாக இருந்தது என்று அவர் கூறியுள்ளார். பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 30 வயதான தமிழக வீராங்கனை கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் 800 மீட்டர் தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

மேலும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பி.யூ.சித்ரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதில் கேரள மாநிலம் பாலக்கோட்டை சேர்ந்த பி.யூ.சித்ரா முதலிடம் வந்து தங்கப்பதக்கத்தை வென்றார். நிமிடம் 14.46 வினாடிகளில் சித்ரா பந்தய இலக்கை கடந்தார். அதேசமயம் இரண்டாவது இடம் பிடித்த பக்ரைன் வீராங்கனையான கஷாவ் 4 நிமிடம் 14.81 விநாடிகளில் பந்ததைய இலக்கை கடந்தார். கடைசி நேரத்தில் ஓட்டம் மிகவும் சவாலாக இருந்தது என்று சித்ரா கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: