மாஸ்கோவில் ரஷிய அதிபர் புதினுடன் வடகொரியா அதிபர் கிம்-ஜாங்-உன் சந்திப்பு

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினுடன் வடகொரிய அதிபர் கிம்-ஜாங்-உன் சந்தித்து வருகிறார்.  வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்க அதிபர் டிரம்புடன் 2 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி உள்ள நிலையில், தனது நட்பு நாடான ரஷ்யாவுடனும் பேச்சு நடத்த விரும்பினார். இதனையடுத்து அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க திட்டமிட்டார். இதுகுறித்த தகவல்கள் கடைசி நிமிடம் வரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கிம் ஜாங் உன் தனது பிரத்யேக  பச்சை நிற ரயில் மூலம், ரஷ்யாவின் துறைமுக நகரான விளாடிவோஸ்டாக்கில் உள்ள  கசான் ரயில் நிலையத்துக்கு நேற்று வந்தார்.

அங்கு அவருக்கு சிவப்பு கம்பள  வரவேற்பு அளிக்கப்பட்டது.  இவருக்கு பலத்த  வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று விளாடிவோஸ்டாக் நகரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். கொரிய தீபகற்பத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, வட கொரியாவின் முன்னேற்றம், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து பேசப்பட்டதாக கூறப்பட்டது.

இதனிடையே வடகொரியா மீது அமெரிக்கா  விதித்துள்ள பொருளாதார தடையை நீக்குவதற்கு  ரஷ்யாவின் ஆதரவைக் கோருவதற்காக  வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இங்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இரு அதிபர்கள் இடையே நடக்கும் முதல் முக்கிய  பேச்சுவார்த்தை இது என்பதால் உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இதற்கு முன்னர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை 4 முறையும், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை 3 முறையும் கிம் ஜாங் உன் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: