சீனாவில் ஜனநாயக ஆதரவு தலைவர்களுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து வெடித்தது போராட்டம்

சீனா: ஹாங் காங்கில் 2014ம் ஆண்டு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுத்த முக்கிய தலைவர்கள் 4 பேருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டதை கண்டித்து பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. சீனாவின் ஆதிக்கம் நிறைந்த ஹாங்காங்கில் சுதந்திரமான தேர்தல் நடத்தப்பட்டு தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பது ஒத்துழையாமை இயக்கத்தினரின் கோரிக்கை ஆகும். இதனை வலியுறுத்தி 2014ம் ஆண்டு அம்ரெல்லா இயக்கம் என்ற பெயரில் பெரும் போராட்டங்களை முன்னெடுத்த சென் கின் மேன், லீ விங் டாட் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் 4 பேருக்கு ஹாங்காங் உயர்நீதிமன்றம் ஒன்றரை ஆண்டு கால சிறை தணடனையை விதித்தது. ஜனநாயக போராட்ட ஆதரவு தலைவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு, அவர்களது ஆதரவாளர்கள் மத்தியில் கொளந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாங் காங்கின் பல இடங்களில் இளைஞர்கள், மாணவர்கள் பதாதைகளை மாற்று மெழுகுவர்த்திகளை ஏந்தி கணடன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது ஹாங்காங்கில்  வெடித்துள்ள போராட்டத்தால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒத்துழையாமை போராட்டத்தில் லட்ச கணக்கானோர் பங்கேற்றனர். 3 மாதங்கள் ஹாங் காங் நகரை உலுக்கிய அந்த போராட்டத்தை போல தற்ப்போது நடைபெற்று வரும் போராட்டமும் மாறிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பேசிய தண்டனை பெற்ற லீ விங் டாட் என்பவர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கூட்டத்தை பார்க்கும் பொழுது தனக்கு நம்பிக்கையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். மேலும் ஜனநாயகத்துக்கான போராட்டத்தை ஹாங்காங் மக்கள் கைவிடமாட்டார்கள் என்றும் சிறையிலிருந்து வெளியே வரும்போது மிகப்பெரிய ஜனநாயக இயக்கத்தை காண்பேன் எனவும் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: