×

சில்லி பாயின்ட்...

* ஸ்பெயினில் நடைபெறும் லா லிலா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில், பார்சிலோனா அணி 2-0 என்ற கோல் கணக்கில் அலாவெஸ் அணியை வீழ்த்தி பட்டம் வெல்லும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டது.
* ஐபிஎல் தொடரில் குல்தீப் மோசமாக பார்மில் இருந்தாலும், அது உலக கோப்பையில் அவரது செயல்பாட்டை எந்த வகையிலும் பாதிக்காது என்று அனுபவ ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
* ரிஷப் பன்ட்டுக்கு 21 வயது தான் ஆகிறது. உலக கோப்பைக்கான அணியில் அவர் இடம் பெறாததால் எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தமில்லை. அவருக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
* ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் 74 கிலோ பிரீஸ்டைல் பிரிவு பைனலில், இந்திய வீரர் அமித் தாங்கர் 0-5 என்ற புள்ளிக் கணக்கில் கஜகஸ்தானின் டானியர் கெய்சனோவிடம் தோற்று வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தார்.
* சீனாவில் நடைபெறும் குன்மிங் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 7-5, 2-6, 7-5 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசரை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். சமந்தா யுஎஸ் ஓபன் முன்னாள் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.
* ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் தொடரின் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் மானு பேக்கர், ஹீனா சித்து இருவரும்  பைனலுக்கு முன்னேத் தவறி ஏமாற்றத்துடன் வெளியேறினர்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : La Lila Football Championship ,Spain
× RELATED 3வது வெற்றிக்காக முட்டி மோதும் மும்பை – பஞ்சாப்