மத்தியில் மூன்றாவது முறையாக ஐ.மு. கூட்டணி ஆட்சி அமைக்கும்: சல்மான் குர்ஷித் நம்பிக்கை

கைமாகஞ்ச்: மத்தியில் மூன்றாவது முறையாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் நம்பிக்கை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கடந்த 2004 மற்றும் 2009ம் ஆண்டுகளில் தொடர்ந்து வெற்றி பெற்று 2 முறை ஆட்சி அமைத்தது. இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் தேர்தலில் ஐ.மு. கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் கைமாகஞ்சில் நேற்று நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரம் செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டம் அலைமோதுகிறது. இது கட்சி தொண்டர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 3வது முறையாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு உருவாகியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகால பாஜ ஆட்சியாளர்களால் கிடைத்த அனுபவம், நிச்சயமாக காங்கிரஸ் ஆட்சி அமைக்க மீண்டும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் நியாய் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 வங்கியில் நேரடியாக செலுத்தும் திட்டம் வாக்காளர்களை கவர்ந்துள்ளது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கரில் விவசாயக் கடனை காங்கிரஸ் அரசு தள்ளுபடி செய்துள்ளதால் எங்கள் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். நாங்கள் பேச்சோடு நின்றுவிடாது செயலில் காட்டுவோம் என பொதுமக்கள் நம்புகின்றனர். இவ்வாறு சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: