342 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரி விலக்கு

புதுடெல்லி: கடந்த பிப்ரவரி மாதம் வரை 342 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஏஞ்சல் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சிறிய அளவு முதலீட்டுடன் தொடங்கப்படுபவை. இவை பங்குகள் மூலம் வெளியில் இருந்து நிதி திரட்டுகின்றன. இந்த நிறுவனங்களின் நியாய விலையின் மீது முதலீடுகள் பெறப்படுகின்றன.

குறிப்பிட்ட அளவுக்கு மேல் பெறப்படும் நிதிக்கு ஏஞ்சல் வரி விதிக்கப்படுகிறது. வருமான வரி சட்டப்பிரிவு 59 பிரிவு 2ன் படி 30.9 சதவீதம் வரி வசூலிக்கப்படும். சாதாரணமாக ஆண்டுக்கு 400 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஏஞ்சல் முதலீட்டாளரிடம் இருந்து முதலீடு திரட்டுகின்றன. இந்த நிலையில், சில ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஏஞ்சல் வரி விதிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதனால் நிறுவனங்கள் கலக்கம் அடைந்தன. மத்திய அரசின் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்துக்கு எது எதிரானதாக உள்ளதாக விமர்சனங்களும் எழுந்தன. இந்த சூழ்நிலையில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், கடந்த பிப்ரவரி மாதம் வரை 342 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஏஞ்சல் வரியில் இருந்து விலக்கு பெற்றுள்ளன. இதற்கான தகவலை மத்திய நேரடி வரிகள் வாரியம் அனுப்பியுள்ளது தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: