×

சீரடி விமானம் திடீர் ரத்து பயணிகள் பரிதவிப்பு: இறங்க மறுத்து போராட்டம்

சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில்  இருந்து சீரடி செல்லும் தனியார் பயணிகள் விமானம் நேற்று மாலை 4.20 மணிக்கு 65வது நடைமேடையில் இருந்து புறப்பட தயாரானது. இதில், பயணம் செய்வதற்காக 174 பயணிகள் தயாராக இருந்தனர். விமானத்தை இயக்குவதற்கு முன் விமானி எந்திரங்களை  சரிபார்த்தபோது அதில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விமானி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, பொறியாளர்கள் வந்து கோளாறை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அதனை உடனடியாக சரிசெய்ய முடியவில்லை என்று தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பயணிகள் நாளை (இன்று) காலை மற்றொரு விமானம் மூலம் சீரடிக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதையேற்று பெரும்பாலான பயணிகள் தங்களது உடைமைகளுடன் விமானத்தைவிட்டு இறங்கி சென்றுவிட்டனர். ஆனால், சுமார் 60 பயணிகள் விமானத்தைவிட்டு இறங்க மறுத்து நாங்கள் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள். இப்படி திடீரென விமானம் ரத்து என்று கூறினால் நாங்கள் இரவு எங்கே சென்று தங்குவது. எங்களுக்கு இப்போழுதே மாற்று விமானம் ஏற்பாடு செய்து எங்களை அனுப்பி வையுங்கள் என்று கூறி விமானத்தின் உள்ளேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அதிகாரிகள் வந்து பயணிகளை இப்போது விமானம் எதுவும் இல்லை எங்களுக்கு ஒத்துழையுங்கள் என்று கேட்டுகொண்டனர். இதையடுத்து 60 பயணிகளும் இரவு நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யக்கேட்டனர். அதற்கு வெளியூர் பயணிகளுக்கு மட்டும் விடுதி ஏற்பாடு செய்கிறோம் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதையேற்று மாலை 6.30 மணியளவில் அனைவரும் விமானத்தை விட்டுகிழே இறங்கி கலைந்து சென்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : flight ,passenger , Sharady flight, cancellation, passenger, tragedy, fight
× RELATED சென்னையில் இருந்து மொரிஷியஸ்...