மே 19ல் நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுகவுக்கு பரிசுப்பெட்டகம் சின்னம்: இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் மே 19ம் தேதி நடக்கவுள்ள இடைத்தேர்தலுக்கு டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவுக்கு பரிசுப்பெட்டகம் சின்னத்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரவக்குறிச்சி, திருவாரூர், ஓட்டப்பிடாரம், சூளுர் ஆகிய தொகுதிகளுக்கு மே 19ம் தேதி இடைத்தேர்தலை நடத்துவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

இதையடுத்து தமிழகத்தில் பிரதான கட்சியான திமுக, அதிமுக, அமமுக உட்பட பல கட்சிகள் தங்களது வேட்பாளரை அறிவித்தன. இந்தநிலையில் டிடிவி தினகரனின் அமமுக ஒரு கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிடிவி தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜசெந்தூர்பாண்டியன் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒரு மனுவை தாக்கல் செயத்திருந்தார், அதில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல், மற்றும் 18 தொகுதிக்கான இடைத்தேர்தல் போலவே தற்போது நடக்கவிருக்கும் மேற்கண்ட நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கும் அமமுக கட்சிக்கு பரிசுப்பெட்டகத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று மாலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மே 19ம் தேதி நடக்கவிருக்கும் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூளூர் ஆகிய தொகுதிகளுக்கு நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கட்சி பரிசுப்பெட்டக சின்னத்தையே ஒதுக்கீடு செய்வதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடைபெறவிருக்கும் மேற்கண்ட நான்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் தரப்பு வேட்பாளர்கள் பரிசுப்பெட்டக சின்னத்தில் ேபாட்டியிடுவார்கள் என தெரியவந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: