×

மாற்றுத்திறனாளியை அலட்சியப்படுத்திய தாசில்தார் நேரில் ஆஜராக வேண்டும்: மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: உதவித்தொகை கோரிய மாற்றுத்திறனாளியை அலட்சியப்படுத்திய தாசில்தார் நேரில் ஆஜராக மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், காஞ்சாம்புறம் அஞ்சல் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், நான் ஒரு கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி, எனக்கு ஊனமுற்றோர் பராமரிப்பு தொகை கோரி விண்ணப்பித்திருந்தேன்.

அவர்கள் மனுவை விளவங்கோடு தனி வட்டாட்சியர் பரிசீலனை செய்து, எனக்கு பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட்டனர். அதன்படி வட்டாட்சியர் சுரேஷ் என் வீட்டில் வந்து ஆய்வு நடத்தி, 2018ம் ஆண்டு முதல் பராமரிப்பு தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் இதுவரை வங்கி கணக்கில் பணம்  வரவில்லை. இதையடுத்து மீண்டும், மாநில ஊனமுற்றோர் ஆணையத்துக்கு கடிதம் எழுதினேன். அதை பார்த்த ஆணையர், உடனடியாக நடவடிக்கை எடுக்க வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். நானும் வட்டாட்சியரிடம் சென்று கேட்டேன்.

ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் என்னை அலட்சியப்படுத்தி, தகாத வார்த்தைகளால் பேசினார். மேலும், பணம் இல்லையென்றும் கூறி அவமானப்படுத்தினார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம், இந்த விவகாரத்தில் தொடர்புடைய கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தாசில்தார் 26ம் தேதி காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tashildar ,State ,Human Rights Commission , Dismissal, negligence, Tashildar, appearing, State Human Rights Commission, Order
× RELATED மாஜி அமைச்சர் ஜெயக்குமார் வழக்கை...