வாக்காளருக்கு முன்னுரிமை கொடுப்பது ஏற்புடையதல்ல: ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு கோட்பாடுகளை வகுத்து செயல்படுத்துகிறது. தேர்தலை நடத்துவதற்காக நியமிக்கப்படும் அதிகாரிகள், துணை அதிகாரிகள் தேர்தல் பணிகளில் முழு கவனம் செலுத்த வேண்டும்.

வாக்குக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டுமே தவிர வாக்காளருக்கு முன்னுரிமை கொடுப்பது ஏற்புடையதல்ல. வாக்காளர் பிரபலமானவர், வசதி படைத்தவர், அரசியல்வாதி மற்றும் எத்துறையைச் சார்ந்தவர் என்றெல்லாம் பார்க்காமல் சாதாரண ஏழை எளியவர் முதல் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவர் வரை யாராக இருந்தாலும் அனைத்து வாக்காளரையும் ஒரே கோணத்தில் பார்த்துத்தான் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.

வாக்காளருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே தவிர வாக்காளருக்கு அழுத்தம் கொடுக்கவோ, முக்கியத்துவம் கொடுக்கவோ முன்வரக்கூடாது. நாட்டை ஆளுவதற்கு பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் தேர்தலில் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள கோட்பாடுகளை, விதிமுறைகளை முறையாக, சரியாக கடைபிடிக்க வேண்டியது தேர்தலை நடத்தும் அதிகாரிகள், துணை அதிகாரிகளின் கடமையாகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: