ஆசிய போட்டியில் முதல் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துக்கு மார்க்சிஸ்ட் வாழ்த்து

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தோஹாவில் நடைபெறும் 23வது ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் மகளிருக்கான ஓட்டப்பந்தயத்தில் திருச்சியைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்றிருக்கிறார். இப்போட்டியில் இந்தியாவுக்கான முதல் தங்க பதக்கம், கோமதியின் மூலமாகவே கிடைத்திருக்கிறது. இந்தியாவுக்கு சிறப்பு சேர்த்த கோமதி மாரிமுத்துவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது. மிக எளிமையான விவசாய குடும்பச் சூழலில் பிறந்த கோமதி மாரிமுத்து, அண்மையில் தந்தையை புற்றுநோய்க்கு பறிகொடுத்து, பயிற்சியாளரை இதய நோயில் இழந்தார். ஒரு விபத்தில் தானும் காயமுற்று இரண்டாண்டுகள் பயிற்சி எடுக்க முடியாமல் பரிதவித்தார்.

இவ்வளவு இடையூறுகளுக்கும் மத்தியில் தங்க பதக்கம் வென்றது அவருடைய விடா முயற்சியாலும், துணிச்சலாலும் தான். தமிழக அரசும், மத்திய அரசின் விளையாட்டுத்துறையும் கோமதிக்கும், அவரைப் போன்ற மற்றவர்களுக்கும் அனைத்து விதங்களிலும் ஆக்கமும், ஊக்கமும், பயிற்சியும் அளித்து சர்வதேச அளவில் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் புகழ் சேர்க்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: