×

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் கைதி பாஷாவுக்கு பரோல் கேட்டு மகள் மனு: அரசு பதில் தர ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள  பாஷாவுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 1998ம்  ஆண்டு கோவை தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த வழக்கில் அல் உம்மா இயக்கத் தலைவர் பாஷாவுக்கு கோவை சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. தற்போது பாஷா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு வயது காரணமாக உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது என்றும் அவருக்கு சிகிச்சை அளிக்க ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும் எனக்கோரி பாஷாவின் மகள் முபீனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், சிறையில் உதவியாளர் இல்லாமல் எந்த பணிகளையும் செய்ய முடியாத நிலையில் தந்தை உள்ளார். அவரைக் கவனித்து சிகிச்சை அளிக்கவும், குடும்ப விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கவும் பரோல் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் ஏப்ரல் 29ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தமிழக  உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் டிஜிபி,  கோவை சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coimbatore , Coimbatore blast, life prisoner, basha, parole, daughter petition
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...