பாஜ எம்பி உதித் ராஜ் காங்கிரசுக்கு தாவல்

பாஜவை சேர்ந்த டெல்லி எம்பி உதித் ராஜ், மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சித் தலைமை வாய்ப்பு தராததால் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். வடமேற்கு டெல்லி மக்களவை தொகுதி பாஜ எம்பி உதித் ராஜ். இந்த முறையும் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு பாஜ தலைமை வாய்ப்பளிக்கும் என உதித் ராஜ் எதிர்பார்த்திருந்தார். ஆனால் உதித்துக்கு மாறாக பஞ்சாப் சுபி பாடகர் ஹன்ஸ் ராஜ் ஹன்சுக்கு பாஜ வாய்ப்பு வழங்கியுள்ளது.

இதனால் கட்சி மீது உதித் ராஜ் அதிருப்தி அடைந்தார். இந்நிலையில் நேற்று காலை அவர், டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அதன் பின்னர் பாஜவில் இருந்து விலகிய உதித் ராஜ், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘பாஜ.வுக்கு எதிராக வாக்குகளை சேகரிப்பேன்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: