மராத்தா போராட்டம் சிக்கலில் பிரக்யா சிங்

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வெளியே இருப்பவர் பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர். ம.பி.யின் போபால் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கிற்கு எதிராக பாஜ சார்பில் போட்டியிடுகிறார். தீவிரவாத தடுப்பு போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரே மரணம் குறித்தும், பாபர் மசூதி இடிப்பு குறித்தும் கடந்த வாரம் இவர் பேசிய சர்ச்சை பேச்சுகளுக்கு நாடெங்கிலும் பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேர்தல் ஆணையமும் தானாக முன்வந்து இவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இதையடுத்து பா.ஜ தலைமை அவருக்கு வாய்ப்பூட்டு போட்டதால் கடந்த சில நாட்களாக அடக்கி வாசித்து வருகிறார். இந்நிலையில் பிரக்யாவை கண்டித்து மராத்தா சமூக மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். போபாலில் நேற்று திரண்ட மராத்தா சமூக மக்கள் பிரக்யாவை கண்டித்தும், கர்கரேயை வாழ்த்தியும் கோஷங்களை எழுப்பியபடி பேரணி சென்றனர்.  

மராத்தா சமுதாயத்தினர் குறிப்பிட்ட அளவில் இருப்பதால் பிரக்யாவுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில், போபாலில் பாஜ வேட்பாளர் பிரக்யா சிங்கிற்கு வாக்கு கேட்டு தேர்தல் பிரசார பேரணி நடைபெற்றது. பேரணியின் உள்ளே புகுந்த ராஜு பட்னாகர் என்பவர் பிரக்யாவிற்கு கருப்பு கொடி காட்டினார். இதை பார்த்த பாஜ.வினர் அவர் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: