யானைகளின் உடல்நிலை பரிசோதிக்க உத்தரவு

நெல்லை:  நெல்லை மாவட்டம் குற்றாலம் அருகேயுள்ள இலஞ்சி குமாரர் கோயிலுக்கு சொந்தமான வள்ளி யானை நேற்று முன்தினம் உடல்குறைவு காரணமாக வெளிப்பிரகாரத்தில் சுருண்டு விழுந்து இறந்தது. இதற்கு பராமரிப்பு குறைபாடு காரணம் என்று பக்தர்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் கோயில் யானைகளை உடற்தகுதி பரிசோதனை செய்ய இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கால்நடை மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், ‘‘நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி, பரிசோதனைக்காக ஸ்ரீபுரம் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டது. இந்த பரிசோதனை வழக்கமான ஒன்றுதான். குறிப்பாக ஒவ்வொரு மாதமும் 2-வது வாரம் யானையை பரிசோதித்து சான்றிதழ் அளிப்போம்.  அத்தகைய பரிசோதனைதான் நடந்தது’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: