துப்பாக்கி, குண்டர்கள் பாஜ.வால் களமிறக்கம் கருப்பு பணத்தை கொண்டு ஓட்டுக்களை வாங்க மோடி முயற்சி: மம்தா பானர்ஜி பகிரங்க குற்றச்சாட்டு

செரம்பூர்: ஓட்டுக்களை பெறுவதற்காக குண்டர்களை துப்பாக்கியுடன் இறக்குமதி செய்துள்ள பாஜ, கருப்பு பணத்தை கொண்டு ஓட்டுக்களை விலைக்கு வாங்கவும் திட்டமிட்டுள்ளதாக மம்தா குற்றம்சாட்டினார். மேற்கு வங்க மாநிலம் ஹுக்ளி மாவட்டம் செரம்பூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்று பேசியதாவது: மோடி, நீங்கள் பொதுமக்களின் ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளை  தடை செய்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையை வலுக்கட்டாயமாக அமல்படுத்தினீர்கள்.

இதன் மூலம் வெள்ளையாக மாற்றப்பட்ட கருப்பு பணத்தை கொண்டு தேர்தலில் வாக்காளர்களின் ஓட்டுக்களை விலைக்கு வாங்க திட்டமிட்டுள்ளீர்கள். ஆனால் உங்களால் ஒருபோதும் மேற்குவங்கத்தில் வாக்குகளை பெற முடியாது. நீங்கள் தேர்தலில் தோற்கடிக்கப்படுவீர்கள் என்பது முன்கூட்டியே எழுதப்பட்ட விதி. மேற்குவங்கத்தில் பாஜ, துப்பாக்கிகள் மற்றும் குண்டர்களை இறக்குமதி செய்து வருகிறது. இதைக்கொண்டு மாநிலத்தில் தங்களுக்கு வாக்கு கிடைப்பதை உறுதி செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதை மாநில அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மாநிலத்தில் அமைதி மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பங்கம் விளைவிக்க அனுமதிக்க மாட்டேன். தேர்தல் நடப்பதை முன்னிட்டு மதுவுக்கு அனுமதி வழங்குவதற்கான லைசென்சை சிலருக்கு மோடி வழங்கியுள்ளார். இதில் நடைபெற்ற முறைகேட்டை தோலுரித்து அவரது உண்மையான முகத்தை உலகறிய செய்வோம். வாக்காளர்களே நீங்கள் நாட்டையும் நமது அரசியலமைப்பையும் காக்க வேண்டும் என விரும்பினால் மோடியை அதிகாரத்தில் இருந்து விரட்டுங்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: