×

கிருஷ்ணசாமியின் ஜாதி சான்றிதழை ரத்து செய்யகோரிய மனு தள்ளுபடி

மதுரை: நெல்லை, பாளையங்கோட்டையைச் சேர்ந்த சிவஜெயப்ரகாஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி. அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தனது ஜாதியை மறைத்து தாழ்த்தப்பட்டோருக்கான பிரிவில் தேவேந்திர குல வேளாளர் என ஜாதி சான்று பெற்றுள்ளார். உண்மைகளை மறைத்து பொய்யான தகவல்களை கொடுத்து ஜாதி சான்று பெற்றுள்ளார். எனவே, அவரது ஜாதி சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் விசாரித்து, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என அறிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Krishnasamy , Krishna Swamy, Caste certificate, cancellation, petition, dismissal
× RELATED குற்றால அருவிக்கு வரும்...