இலங்கை குண்டு வெடிப்பில் திமுகவினர் 6 பேர் உயிர் தப்பினர்: பரபரப்பு தகவல் அம்பலம்

திருப்பூர்: இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 359 பேர் பலியானார்கள். குண்டு வெடிப்பு நடந்த ஓட்டலில் தங்கியிருந்த திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் உட்பட 6 பேர் உயிர்தப்பினர். இதுகுறித்து திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்வராஜ் கூறியதாவது: தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையில் இலங்கைக்கு சுற்றுலா செல்ல கட்சி நிர்வாகிகள் விரும்பினர். இதைத்தொடர்ந்து கடந்த 20ம் தேதி மாலை 3 மணிக்கு கோவையில் இருந்து விமானத்தில் இலங்கைக்கு புறப்பட்டோம். என்னுடன், 15 வேலம்பாளையம் பகுதி செயலாளர் ராமதாஸ், வடக்கு மாவட்ட வர்த்தக அணி பொறுப்பாளர் ராஜ்மோகன்குமார், ஓட்டல் அதிபர் முருகானந்தம் உள்ளிட்ட 5 பேர் வந்தனர். கொழும்பு நகரில் கிங்ஸ்பரி நட்சத்திர ஓட்டலில் தங்கினோம். நான் மற்றும் 2 பேர் ஓட்டலின் 7-வது மாடியிலும், மீதமுள்ள 3 பேர் 6-வது மாடியிலும் தங்கியிருந்தோம்.

21ம் தேதியன்று காலை டிபனுக்காக ஓட்டலின்கீழ் தளத்துக்கு செல்ல தயாராக இருந்தோம். காலை 8.45 மணி அளவில் ஓட்டலின் கீழ்தளத்தில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. கீழ்த்தளத்தில் மக்கள் அலறியடித்து நாலாபுறமும் ஓடினார்கள். அதன்பிறகு ஓட்டல் ஊழியர்கள் அறைக்கு வந்து எங்களை பாதுகாப்பாக கீழே அழைத்துச்சென்றனர். அதன்பிறகே வெடிகுண்டு வெடித்தது தெரியவந்தது. மயிரிழையில் உயிர் தப்பினோம். எங்களை  வேறு ஓட்டலில் தங்க வைத்தனர். வெளியில் என்ன நடக்கிறது என்று கூட அறிய முடியவில்லை.பின்னர் இந்தியா திரும்பினோம். இவ்வாறு செல்வராஜ் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: