திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் செம்மரக்கட்டை கடத்திய வழக்கில் ஆஜராக 498 பேருக்கு சம்மன்: ஆந்திர போலீசார் வழங்கினர்

கண்ணமங்கலம்: ஆந்திர வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்திய வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராக, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 498 பேருக்கு, ஆந்திர போலீசார் சம்மன் வழங்கினர். ஆந்திர மாநிலம், திருப்பதி வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டுவதற்கு, அதிக பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறி, சில ஏஜெண்ட்டுகள் தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, கூலித்தொழிலாளர்களை அழைத்து செல்கின்றனர். அவ்வாறு செல்லும் தொழிலாளர்கள் செம்மரங்களை வெட்டும்போது, ஆந்திர மாநில வனத்துறை, போலீசாரால் கைது செய்யப்பட்டு, அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட போளூர், ஜமுனமரத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் 498 பேர் மீது வழக்கு உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களை ஆந்திர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் ஆந்திர மாநில செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி காந்தாராவ்,  திருவண்ணாமலை எஸ்பி சிபிசக்கரவர்த்தியிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, எஸ்பி உத்தரவுப்படி தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த காவல் துறையினர் 10 குழுக்களாக சென்று,  வரும் 30ம் தேதி ஆந்திர மாநில கோர்ட்டில் ஆஜராகும்படி 498 நபர்களுக்கு நீதிமன்ற உத்தரவு நகலை நேற்று வழங்கினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: