கோவையில் பாலியல் கொடுமைக்கு பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ3 லட்சம் நிதியுதவி: எடப்பாடி உத்தரவு

சென்னை: கோவை மாவட்டத்தில் பாலியல் கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கோயம்புத்தூர்  பன்னிமடை கிராமம், கஸ்தூரி நாயக்கன்புதூர் மஜரா திப்பனூர் பகுதியை சேர்ந்த 7 வயது பெண் குழந்தை கடந்த மாதம் 25ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்டார்.  இந்த கொடூரச் செயலுக்கு காரணமான குற்றவாளி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத்தர துரித நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு கூறி உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: