குத்தகை ஒப்பந்த ஆவணத்தை ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து கட்டணம் வசூலிக்க கூடாது: பதிவுத்துறை ஐஜி சார்பதிவாளருக்கு உத்தரவு

சென்னை: குத்தகை ஒப்பந்த ஆவணத்தை ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று பதிவுத்துறை ஐஜி பாலச்சந்திரன் சார்பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். வீடு அல்லது விளை நிலம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஒரு நபர் இன்னொரு நபருக்கு குத்தகைக்கு விடுகிறார். அவர் குத்தகைக்கு விடும்போது கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். இதற்காக சார்பதிவாளர் அலுவலகங்களில் குத்தகை ஒப்பந்த ஆவணம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆவணங்களை பதிவு செய்யும்போது குத்தகைக்காக விடப்படும் தொகையை அடிப்படையாக வைத்து முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

சமீப காலமாக குத்தகைக்கு விடும் நபர்கள் ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து குத்தகை கட்டணம் வசூலிக்கின்றனர். அவ்வாறு வசூலிக்கப்படும் குத்தகை கட்டணத்தை வைத்து முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் வசூலிக்கப் படுவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து பதிவுத்துறை ஐஜி பாலச்சந்திரன் அனைத்து சார்பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் குத்தகை ஒப்பந்த ஆவணம் பதிவு செய்யும் போது முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் ஜிஎஸ்டியை சேர்த்து கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஜிஎஸ்டி வரி இல்லாமல் வரும் தொகையை அடிப்படையாக வைத்து முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் வசூலிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: