வாக்கு இயந்திரங்களுக்கு பாதுகாப்பை எஸ்பிக்கள் அதிகரிக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு

சென்னை:தமிழகத்தில் 38 மக்களவை தொகுதி, 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்கு பதிவான இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு துணை ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளில் பதிவான வாக்குகள் ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் 45 மையங்களில் வாக்கு இயந்திரங்கள் ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா மூலம் அரசியல் கட்சி ஏஜென்டுகள் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், மதுரை தொகுதியில் வாக்கு இயந்திரம் அறை அருகே உள்ள வாக்குப்பதிவு நாளன்று பயன்படுத்திய பொருட்கள் வைத்துள்ள அறைக்குள் சென்று வந்ததாக பெண் வட்டாட்சியர் சிக்கியுள்ளார். அங்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து கரூர் தொகுதி இயந்திரம் வைக்கப்பட்டுள்ள மையத்திலும் பாதுகாப்பு இல்லை என்று புகார் எழுந்துள்ளது.

இந்த சம்பவங்களால் தமிழகத்தில், அனைத்து மையங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை எதிர்க்கட்சி தலைவர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா ஆகியோர் நேற்று மாலை 4 மணிக்கு, தலைமை செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (கலெக்டர்கள்), மாவட்ட எஸ்பிக்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 24 மணி நேரம் பாதுகாப்பு சரியாக உள்ளதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். எந்தவித சிறு அசம்பாவிதங்களுக்கும் இடம் அளிக்க கூடாது. அனைத்துக்கட்சி ஏஜென்டுகளும் 24 மணி நேரமும் ஸ்டிராங் ரூமுக்குள் பாதுகாப்பாக இருக்கும் வாக்கு பதிவான இயந்திரங்களை வெளியில் வைக்கப்பட்ட திரையில் கண்காணிக்க அனுமதிக்க வேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: