இன்ஜினியரிங் கவுன்சலிங்குக்கு புதிய மென்பொருள்?

சென்னை: தமிழகத்தில் 2019-2020ம் ஆண்டு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான புதிய அரசாணை மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இதன் மூலம் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் அதிகாரம் குறைப்பு செய்யப்பட்டு, புதிய அரசாணை வெளியானது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கான பணிகளை தொடங்க வேண்டிய நிலையில், எப்ரல் மாதம் தொடங்கிய பின்னரும் இன்ஜினியரிங் கவுன்சலிங்கை நடத்தப்போவது யார் என்ற கேள்வி தொடர்ந்தது. இந்நிலையில் உயர்கல்வித்துறை செயலாளர் தொழில்நுட்ப கல்வி இயக்ககமே இன்ஜினியரிங் கவுன்சலிங்கை நடத்தும் என்று கூறியிருந்தார்.  

இந்நிலையில் இன்ஜினியரிங் கவுன்சலிங்கை ஆன்லைனில் நடத்துவதற்கான புதிய மென்பொருளை பேராசிரியர்கள் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இன்ஜினியரிங் கலந்தாய்வில் 42  மாணவர் சேர்க்கை உதவி மையங்களில் கண்காணிப்பாளர்களாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இம்முறை அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளில் பணியாற்றிய பேராசிரியர்கள் மாணவர் சேர்க்கை உதவி மையங்களில் கண்காணிப்பாளராக பணியாற்றுவார்கள் என்று கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: