உதவி வனக்காப்பளர் உள்ளிட்ட பணிகளுக்கு மே 6 முதல் 16 ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: உதவி வனக்காப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு மே 6ம் முதல் 16ம் தேதி வரை சான்று சரிபார்ப்பு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. வனத்துறையில் 14 உதவி வனக்காப்பாளர், தொல்லியல் துறையில் ஒரு உதவி நூலகர் மற்றும் ஒரு இளநிலை கல்வெட்டு ஆய்வாளர் உள்ளிட்ட  பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. இதைத் தவித்து ேதாட்டக் கலை துறையில் 279 உதவி இயக்குனர்கள் மற்றும் தோட்டக் கலை அலுவலர்களுக்கான தேர்வு கடந்த ஜனவரி மாதம் 12 மற்றும் 13 ம் தேதி நடைபெற்றது.  மேலும் அறநிலையத்துறையில் 55 செயல் நிலை அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த பிப்ரவரி 16ம் தேதி நடைபெற்றது. இதில் உதவி வனக்காப்பாளர் தேர்வில் கலந்து கொண்ட 296 பேரில் 42 பேர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் மே 9ம் தேதி நடைபெறுகிறது.

உதவி நூலகர் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் தேர்வில் கலந்து கொண்ட 142 பேரில் 6 பேர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேர்காணலும் 9ம் தேதி நடைபெறுகிறது. தோட்டக் கலை துறை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக் கலை அலுவலர் பணிக்கான தேர்வில் 2047 பேர் கலந்து கொண்டனர். இதன் முடிவில் 545 பேர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் மே 6,7, 10, 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அறநிலையத் துறை செயல் நிலை அலுவலர் பணிக்கான நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட 112 பேர் மே 7 ம் தேதி முதல் 14 ம் தேதிக்குள் தங்களது சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். மேலும் தகவல்களுக்கு தேர்வர்களின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: