சென்னையில் பூஜ்ஜிய நிழல் நாள்: பொதுமக்கள் ஆர்வம்

சென்னை: பூஜ்ஜிய நிழல் நாளை முன்னிட்டு நிழல் இல்லாத நாளை, சென்னையில் நேற்று பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு இடத்துக்கு இரு முறை பூஜ்ஜிய நிழல் நாள் வருகிறது. சூரியன், பூமியின் அந்த பகுதி நேர்கோட்டில் அமைவதால் ஏற்படும் நிகழ்வு இது. பூமி சுழற்சி காரணமாக கல்பாக்கம், மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில் ஏப். 23ம் தேதி பூஜ்ஜிய நிழல் நாள் வந்தது. சென்னையில் இந்த ஆண்டு பூஜ்ய நிழல் நாள் ஏப். 24, ஆக.18ம் தேதிகளில் வருகிறது. அப்போது பூஜ்ய நிழல் நேரத்தில் நம்முடைய நிழல் நேராக நம்முடைய கால்கள் உள் பகுதியிலயே விழும். நம்முடைய நிழல் நம் உடலைவிட்டு வெளியே செல்லாது.

இந்த அதியச நிகழ்வு நேற்று பகல் 12.07 மணிக்கு வந்தது. பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் ெபாதுமக்கள் அறிவியல் ஆர்வலர்கள் என பலரும் பூஜ்ய நிழல் நாளை ஆர்வத்துடன் பார்த்தனர். சென்னை பிர்லா கோளரங்கில் பூஜ்ய நிழல் நாளை முன்னிட்டு பொதுமக்கள் பார்வையிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தரையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களின் நிழல் விழாதது தொடர்பாக அதிகாரிகள் மாணவர்கள், பொதுமக்களுக்கு  விளக்கினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: