ஆசிய தடகள போட்டியில் வெள்ளி ஆரோக்கிய ராஜீவுக்கு முதல்வர் வாழ்த்து கடிதம்

சென்னை: தமிழ்நாட்டைச்  சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ்,  கத்தார் நாட்டில் தோஹா நகரில் நடைபெற்று வரும் ஆசிய தடகள போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில்  வெள்ளிப்பதக்கம் வென்றார். இதையொட்டி முதல்வர் எடப்பாடி நேற்று ஆரோக்கிய ராஜீவுக்கு வாழ்த்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘4x400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தய போட்டியில், வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை புரிந்த செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். இதன்மூலம் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த தங்களுக்கு, என் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்று சர்வதேச அளவில் நடைபெறும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு, மேலும் பல சாதனைகள் புரிந்து, இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும்’ என, கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: