×

பிரதமர் மோடியின் 4 ஆண்டு ஆட்சியில், பொருளாதாரத்தில் இந்தியா 6-வது இடம்: மத்தியமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்

ஜார்க்கண்ட்: 2030-ம் ஆண்டில், மூன்று வல்லரசு நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா பகுதியில்  நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பொருளாதாரம் மற்றும் வலிமையான நாடுகளின் வரிசையில் முதல் 3 இடங்களில் ரஷ்யா, சீனா  மற்றும் அமெரிக்கா நாடுகள் இருப்பதாக தெரிவித்தார். 2030 அல்லது 2031-ம் ஆண்டுக்குள், அந்த மூன்று வல்லரசு நாடுகளில், ஒன்றாக இந்தியா திகழும் என நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர்  மோடியின் 4 ஆண்டுகால ஆட்சியில், உலகளாவிய பொருளாதாரத்தில், 10-வது இடத்திலிருந்து 6-வது இடத்துக்கு இந்தியா முன்னேறி இருப்பதாக ராஜ்நாத் சிங் பெருமிதமாக கூறினார்.

இதற்கிடையே, கடந்த 2018-ம் ஆண்டு அதிக அளவிலான ஏழைகளை கொண்ட நாடு என்ற நிலையில் இருந்து இந்தியா முன்னேற்றம் அடைந்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான  வறுமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் வேகமாக குறைந்து வருவதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெறும் வருமானம் மட்டுமின்றி குறைந்தபட்ச  பொருளாதார பாதுகாப்பை உள்ளடக்கி 2030-க்குள் உலகளவில் ஏழ்மையை ஒழிப்பதை குறிக்கோளாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. அதன்படி இந்தியாவில் தமிழ்நாடு, திரிபுரா,  மிசோரம், மேகாலயா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் தொடர் வளர்ச்சியை பெற்று வருகின்றன. வறுமையை ஒழிப்பதில் ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மணிப்பூர், பீஹார், மகாரஷ்டிரா ஆகிய  மாநிலங்கள் கடைசி இடத்தில் உள்ளன குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,India ,Rajnath Singh , Prime Minister Modi, Economy, India, Central Minister Rajnath Singh, is proud
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...