×

ஐபிஎல் டி20 போட்டி: பெங்களூருக்கு எதிராக பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு

பெங்களூரு: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்க உள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் ஆடியுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி அவற்றில் 3 போட்டிகளில்  மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 6 புள்ளிகளுடன் பெங்களூரு அணி, பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற பெங்களூரு அணி, இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வென்றே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, இதுவரை 10 போட்டிகளில் ஆடி, அவற்றில் 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL T20 ,match ,Punjab ,team ball ,Pakistan , IPL T20 match, Bengaluru, Punjab team, bowling
× RELATED ஐபிஎல் டி20 திருவிழா- சீசன் 17 சென்னையில்...