எத்தியோப்பியாவில் உள்ள தேசியப் பூங்காவில் ஒரே வாரத்தில் 28 நீர்யானைகள் உயிரிழப்பு

எத்தியோப்பியா: ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள்ள தேசியப் பூங்காவில் ஒரே வாரத்தில் 28 நீர்யானைகள் இறந்து கிடந்தது  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நீர்யானைகள், 40 முதல் 50 ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன. இவை 3.5 மீட்டர்  நீளமானவை; 1.5 மீட்டர் தோளுயரமுடையவை; 1500 முதல் 3200 கிலோகிராம் நிறையுடையவை. பெண் நீர்யானைகள் ஆண் நீர்யானைகளைவிட  சிறியவை. நீர்யானைகள் தாமாக மனிதரைத் தாக்குவதில்லை. ஆனால் அவற்றின் ஆள்புலத்தினுள் நுழைவோரை மூர்க்கமாகத் தாக்கக் கூடியவை.  நீர்யானைக் குட்டிகள் நீரினுள்ளேயே பிறப்பதால் தம் முதல் மூச்சுக்காகவே நீந்தி நீர்மட்டத்திற்கு வருகின்றன. கூட்டங்களாக வாழும் நீர்யானைகள்,  ஒரு கூட்டத்தில் 40 நீர்யானைகள் வரை காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதற்கிடையே, தி ஜிபி ஷெலோகோ தேசியப் பூங்காவில் ஏறத்தாழ 200 நீர்யானைகள் வளர்க்கப்பட்டு வந்தன. இப்பகுதியில் நீர்யானைகளின்  உயிருக்கு அச்சுறுத்தல் இருந்துவந்ததால் அதிக பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ஜிபி  பூங்காவில் 28 நீர் யானைகள் உயிரிழந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை வேட்டையாடிகளால் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக எத்தியோப்பிய அரசு அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: