×

48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்...... மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: சென்னை வானிலை மையம்

சென்னை: நாளை முதல் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும். தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 28-ம் தேதி முதல் மழை பெய்ய துவங்கும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் 29-ம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடலுக்கு சென்ற மீனவர்கள் ஏப்ரல் 28-ம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. இலங்கை கடற்கரை பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 24 மணிநேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் 5 செ.மீ. மழையும், கோவை வால்பாறையில் 4 செ.மீ. மழையும், தஞ்சை, மதுக்கூர், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Fishermen ,sea ,Chennai Weather Center , Chennai, weather center, fishermen
× RELATED குஜராத் கடல் பகுதியில் 173 கிலோ போதைப்...