தொழிலதிபர் மகள் திருமணத்தில் தங்க அரிவாள்மனை, வெள்ளி பீரோ சீர்வரிசை : வாட்ஸ் அப்பில் கலக்கும் காரைக்குடி கல்யாணம்

காரைக்குடி: காரைக்குடியில் தொழிலதிபர் மகள் திருமணத்தில் தங்க அரிவாள்மனை, வெள்ளி பீரோ ஆகியவற்றை சீர்வரிசையாக வழங்கி அசத்திய சம்பவம் வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. திருமணங்கள் கோயில்கள், மண்டபங்களில் நடத்தப்பட்ட காலம் மாறி வருகிறது. பணம் படைத்தவர்கள் தங்களது பகட்டை காட்டும் விழாவாக திருமண விழாக்களை நடத்தி வருகின்றனர். திருமண விழா அழைப்பதில் வழங்குவதில் தொடங்கி, சாப்பாடு என அனைத்து வகைகளிலும் தங்களின் செல்வாக்கை காட்டி வருகின்றனர். மஞ்சள் நிறத்தில் பத்திரிக்கை வழங்கிய காலம் போய், தற்போது புத்தக வடிவில் ஒரு பத்திரிகைக்கு ரூ.500க்கு மேல் செலவு செய்து வழங்குகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சில தினங்களுக்கு முன்பு ஒரு தொழிலதிபரின் மகளுக்கு திருமண விழா நடந்தது. இதில், அவரது செல்வாக்கை வெளிக்காட்டும்விதமாக, திருமணத்துக்கு முதல்நாள் இரவு ரூ.20 லட்சத்துக்கு மேல் வெடி வைத்து ஊரை மிரள வைத்தார். அதேபோல், மற்றொரு திருமண நிகழ்ச்சியில் திருமண சீர்வரிசையாக தங்க டம்ளர், செம்பு, அரிவாள்மனை, தேங்காய் துருவி, கத்தி என பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதேபோல் வெள்ளியில் தங்க முலாம் பூசப்பட்ட பீரோ, இடியாப்பக்கட்டை என சீர்வரிசை பொருட்களை வழங்கி அசத்தியிருந்தனர். இந்த போட்டோகள் தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி பிரமிப்பை ஏற்படுத்தி வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஆத்தூர் அருகே தொழிலதிபர் கடத்தல் என புகார்