தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது புகார் அளித்த பெண்ணுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ஏப்ரல் 26ம் தேதி நேரில் ஆஜராகவுமாறு அந்த பெண்ணுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் புகார் அளித்தார். அந்தப் புகார் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில், ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரிக்க இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வை ரஞ்சய் கோகாய்க்கு அடுத்த நிலையிலுள்ள நீதிபதி எஸ்.ஏ.போப்டி நியமித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த நீதிபதி போப்டி, ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு ரஞ்சன் கோகாய் என்னை நியமித்தார். நான், இந்த வழக்கை வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வை நியமித்துள்ளேன். எனக்கு அடுத்த நிலையிலுள்ள மூத்த நீதிபதி என்பதால் ரமணாவையும் மற்றும் பெண் நீதிபதி என்பதால் இந்திரா பானர்ஜியையும் நியமித்துள்ளேன். இதுதொடர்பாக பாலியல் புகார் அளித்த பெண்ணுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணையானது, வழக்கமான விசாரணை போல இருக்காது. இருதரப்பு சார்பாக வழக்குரைஞர்கள் யாரும் வாதிட மாட்டார்கள். பிரத்யேக அறையிலேயே விசாரணை நடத்தப்படும். விசாரணையை முடிப்பதற்கு கால அளவு எதுவும் நிர்ணயிக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ரஞ்சன் கோகாய் மீது தொடரப்பட்டுள்ள பாலியல் புகார் தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதற்காக புகார் அளித்த பெண்ணை 26ம் தேதி நேரில் ஆஜராக உச்சநீதிமன்ற நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதுதவிர, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக செயல்பட தன்னை வற்புறுத்தியதாக வழக்கறிஞர் உத்சவ் பெயின்ஸ் பிராமண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இது தொடர்பாக இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு வழக்கறிஞர் உத்சவ் பெயின்ஸ்-க்கு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இன்று ஆஜரான வழக்கறிஞர் உஸ்தவ் பெய்ன்ஸ், உச்சநீதிமன்றத்தில் சிசிடிவி ஆதாரங்களுடன் ஆவணங்களை தாக்கல் செய்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED கோவை அருகே கிணற்றில் வீசி பெண் குழந்தை...