இலங்கை தாக்குதல் தொடர்பாக 60 பேர் கைது: அமைச்சர் ருவான் விஜயவர்த்தனே தகவல்

கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ அமைச்சர் ருவான் விஜயவர்த்தனே தெரிவித்தார். இலங்கையில் கடந்த ஞாயிறன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என அடுத்தடுத்து 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இதுவரை 45 சிறுவர்கள் உட்பட 359 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பயங்கரவாதிகள் நடத்திய இந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து இலங்கையில் நேற்று முன்தினம் இரவு அவசர நிலை பிரகடனம் செய்து அதிபர் சிறிசேன உத்தரவிட்டார். இந்த கொடூர தாக்குதலுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது. படிப்படியாக இலங்கையில் இயல்புநிலைக்கு திருப்பிவந்தது. இந்நிலையில் இன்று காலை கொழுப்புவின் வெள்ளவத்தை பகுதியில் உள்ள சவாரி திரையரங்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertising
Advertising

இலங்கையை உலுக்கிய இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இலங்கை ராணுவ அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டினரின் 17 உடல்கள் அடையாளம் காணப்பட்டு, உடல்கள் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பில் உயிரிழந்த 359 பேரில் 39 பேர் வெளிநாட்டினர். இது தாக்குதல் தொடர்பாக 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேர் தற்கொலைப்படையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இரண்டு குழுக்களாக பிரிந்து பயங்கரவாத கும்பல் செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. இதில் ஒரு குழுவின் தலைவர் மனித வெடிகுண்டாக மாறி உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.  இன்னும் 2 நாட்களில் இலங்கையின் பாதுகாப்பு நிலவரம் குறித்து உறுதி செய்யப்படும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: