தலைமை நீதிபதிக்கு எதிராக பெண் பாலியல் புகாரில் சிசிடிவி ஆதாரங்களுடன் ஆவணங்களை வழக்கறிஞர் தாக்கல்

டெல்லி: தலைமை நீதிபதிக்கு எதிராக பெண் பாலியல் புகாரில் உச்சநீதிமன்றத்தில் சிசிடிவி ஆதாரங்களுடன் ஆவணங்களை வழக்கறிஞர் உஸ்தவ் பெய்ன்ஸ் தாக்கல் செய்தார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிருந்ததும், மேலும் புகார் அளித்த பெண் நாளை மறுநாள் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் வழக்கில் சிபிஐ இயக்குனர், டெல்லி காவல் ஆணையர் ஆஜராக உச்சநீதிமன்றத்தில் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED போலி ஆவணங்கள் மூலம் வங்கிகடன் பெற்றவர் கைது