×

இலங்கையில் மீண்டும் பதற்றம்..... தமிழர்கள் வாழும் பகுதி அருகே வெடிகுண்டு கண்டெடுப்பு

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் மேலும் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்புவின் வெள்ளவத்தை பகுதியில் உள்ள சவாரி திரையரங்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இலங்கையில் கடந்த ஞாயிறன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என அடுத்தடுத்து 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இதுவரை 45 சிறுவர்கள் உட்பட 359 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பயங்கரவாதிகள் நடத்திய இந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து இலங்கையில் நேற்று முன்தினம் இரவு அவசர நிலை பிரகடனம் செய்து அதிபர் சிறிசேன உத்தரவிட்டார்.

இந்த கொடூர தாக்குதலுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது. படிப்படியாக இலங்கையில் இயல்புநிலைக்கு திருப்பிவந்தது. இந்நிலையில் இன்று காலை கொழுப்புவின் வெள்ளவத்தை பகுதியில் உள்ள சவாரி திரையரங்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் அதனை பத்திரமாக அப்புறப்படுத்தி வெடிக்கச் செய்தனர். இந்தப்பகுதியில் தமிழர்கள் அதிகளவில் வாழ்வது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sri Lanka , Sri Lanka, Colombo, serial blasts attack
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்