இலங்கை தொடர் குண்டு வெடிப்பு : பலி எண்ணிக்கை 359ஆக அதிகரிப்பு!

கொழும்பு : இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 359ஆக அதிகரித்துள்ளது. ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் எட்டு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பில் நேற்று வரை 310 பேர் உயரிழந்திருந்த நிலையில், தற்போது பல எண்ணிக்கை 359ஆக அதிகரித்துள்ளது மேலும் 400க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேவாலயங்கள், சொகுசு உணவகங்களில் நடந்த இந்த தாக்குதலில் 45 குழந்தைகள் உட்பட பல வெளிநாட்டினரும் உயிரிழந்தனர். இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் என்னும் இயக்கம் காரணம் என இலங்கை அரசு அறிவித்தது.

Advertising
Advertising

ஆனால் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் இந்த குண்டு வெடிப்புக்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக ஐஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ள வீடியோவில், தற்கொலைப்படையினர் தங்கள் தாக்குதலுக்கு முன்பு கூடி நின்று உறுதி மொழி எடுத்துக்கொள்ளும் காட்சி காணப்படுகிறது. மேலும் தாக்குதல்கள் நடைபெறலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் வெடிகுண்டுடன் ஒரு லாரி பிடிபட்டதை அடுத்து சாலைகளில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. மக்களிடம் இலங்களை அரசு மன்னிப்பு கேட்டுள்ளது பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் சந்தேகத்திற்குரிய நபர் தென்பட்டால் காவல்துறையினரிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: