சன்னியாசியாக நினைத்தேன்..... பிரதமராக வேண்டும் என நினைத்ததில்லை: பிரதமர் மோடி

டெல்லி: பிரதமராக வேண்டும் என்று நான் ஒரு போதும் நினைத்தது இல்லை என்று அக்‌ஷய் குமாருடனான கலந்துரையாடலில் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பேட்டி கண்டார். டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் இந்த பேட்டி காணும் நிகழ்வு நடைபெற்றது. இந்த பேட்டியின் போது பிரதமர் மோடி பல்வேறு சுவாரசிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டு உள்ளார். பிரதமர் மோடி பேட்டியின் போது கூறியதாவது: நான் சன்னியாசியாக வேண்டும் என்றுதான் நினைத்தேன், பிரதமராக வேண்டும் என்று ஒரு போதும் நினைத்தது இல்லை. எனக்கு கோபம் வராததை பார்த்து  மக்கள் ஆச்சர்யபடுகிறார்கள். கோபப்படும் அளவுக்கு நான் எந்த சூழலையும் உருவாக்கி கொள்ளவில்லை. எனக்கு கோபம் வரும் அதை நான் ஒருபோதும் வெளிக்காட்டியதில்லை.  எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பு வரை எனக்கு வங்கி கணக்கு கிடையாது.

சிறுவயதிலேயே நான் எனது தாயை விட்டு பிரிந்து வந்து விட்டேன். ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்று நினைத்தேன். வரலாறு போற்றும் தலைவர்களின் சுயசரிதைகளை படிப்பதில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு.  அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது எனக்கு அளவுகடந்த நட்பு உள்ளது. குறிப்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி எனக்கு ஒவ்வொரு வருடமும் குர்தாவை பரிசாக வழங்குவார். சமூகவலைத்தளங்களில் வரும் மீம்ஸ்-களை மிகவும் ரசிப்பேன். இத்தகைய மீம்ஸுகள் மூலம் சாதாரண மனிதனின் படைப்பாற்றல் வெளிப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் நான் நகைச்சுவையாக பேசுவதை தவிர்த்து வருகிறேன். ஏனெனில் அதனை TRP க்காக தவறாக சித்தரிக்கப்படுகின்றன. என் வாழ்நாள் முழுவதும் மனித வள மேம்பாட்டில் நான் செலவிட்டுள்ளேன். எனக்கு இந்த நாடுதான் குடும்பம். அதனை முறையாக வழிநடத்துவேன்.  இவ்வாரு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: