காங்கிரஸ் விரும்பினால் வாரணாசியில் போட்டி: பிரியங்கா காந்தி பேச்சு

வாரணாசி: காங்கிரஸ் கட்சியின் தலைமை விரும்பினால் பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிடுவேன் என கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

உபி.யில் உள்ள வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். இங்கு 7வது கட்டமாக மே 19ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் பலர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். எனினும் இதுகுறித்து கட்சி மேலிடம் எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.
Advertising
Advertising

கட்சியின் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடும் அமேதி, தனது தாயார் போட்டியிடும் ரேபரேலி தொகுதிகளில் தொடர்ந்து பிரியங்கா காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகின்றார். அமேதி தொகுதியில் இரண்டாவது நாளாக நேற்றும் பிரியங்கா பிரசாரம் மேற்கொண்டார். கவுரிகன்ச் பகுதியில் கட்சி தலைவர்களை சந்தித்து அவர் ஆலோசனை செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரியங்கா, “நான் இதை தான் மீண்டும் மீண்டும் கூறுவேன். கட்சித் தலைமை என்னை என்ன செய்ய சொல்கிறதோ அதை தான் நான் செய்வேன். கட்சி விரும்பினால் வாரணாசியில் போட்டியிடுவேன். மக்கள் துன்புறுத்தப்பட்டதை உணர்கிறார்கள். அவர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: