சித்தூர் சிட்டியில் ஐஐஐடி பட்டமளிப்பு விழா இளைஞர்கள் எண்ணிக்கை நாட்டிற்கு கிடைத்த வரம்: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு

திருமலை: இளைஞர்கள் எண்ணிக்கை நமக்கு கிடைத்த வரம் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார். ஆந்திராவின் சிட்டி தொழிற்பூங்காவில் ஐஐஐடியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது: 2015ம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்தபோது ஐஐஐடிக்கு  அடிக்கல் நாட்டினேன். தற்போது துணை ஜனாதிபதியாக முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவிற்கு வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அரசு - தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ள ஐஐஐடி மூலமாக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

வரும் பத்து ஆண்டுகளில் 10 டிரில்லியன் டாலர்  பொருளாதார ரீதியாக உயர்ந்து சர்வதேச அளவில் மிகப்பெரிய மூன்றாவது பொருளாதார நாடாக இந்தியா விளங்கும். நாடு முழுவதும் 65 சதவீதம் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இருப்பது நமக்கு கிடைத்த மிகப்பெரிய பலம் மற்றும் வரமாகும். தற்போது நாடு முழுவதும் 900 பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆனால் சர்வதேச அளவில் முதல் 200 பல்கலைக்கழகங்களில் கூட நமது இந்திய பல்கலைக்கழகங்கள் இல்லை. பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கையை உயர்த்துவது நல்லதே. அதே நேரத்தில் அதன் தரத்தையும் உயர்த்த வேண்டும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: