அமெரிக்க தடை ஒரு வாரத்தில் அமல் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வருமா? மற்ற நாடுகளிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா திட்டம்

புதுடெல்லி: அமெரிக்க தடையை எதிர்கொள்ள இந்தியா தயாராகி விட்டது. ‘ஈரான் எண்ணெய் சப்ளை இழப்பை ஈடுகட்ட மற்ற நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது என்று முடிவு செய்துள்ளது. அணுஆயுத தடை ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் விலகி விட்டது. அணு ஆயுத பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்காத ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்து வருகிறது. ஈரானிடம் இருந்து கச்சா  எண்ணெய் வாங்க, எல்லா நாடுகளுக்கும் அமெரிக்கா போட்டுள்ள தடை ஒரு வாரத்தில் அமலாக உள்ளது. ஈரானிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளி  3வது நாடு இந்தியா. சீனாவுக்கு அடுத்து அதிக அளவில் வாங்கும் நாடு. கடந்த ஆறு மாதத்துக்கு முன் தடை அறிவிப்பை  அமெரிக்கா வெளியிட்டது. இருப்பினும் இந்தியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் இந்த தடையை தளர்த்தியது அமெரிக்கா.

இந்த சலுகை இம்மாதத்துடன் முடிகிறது. வரும் 1 ம் தேதியில் இருந்து ஈரானிடம்  யாரும் கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என்று கூறி விட்டது.  இதற்கு இந்தியாவும் ஒப்புதல் அளித்து விட்டது. ஈரான் சப்ளை தட்டுப்பாட்டால், பெட்ரோல், டீசல் வினியோகத்தில் பாதிப்பு வருமா என்ற அச்சம் காணப்படுகிறது. இதுகுறித்து மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ட்விட்டரில் கூறியிருப்பதாவது: ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் சப்ளை குறைந்தாலும், விரைவில் நின்றாலும் எந்த பாதிப்பும் இந்தியாவுக்கு ஏற்படாது. எண்ணெய் வள நாடுகளின் அமைப்பில் உள்ள வேறு சில நாடுகளில் இருந்து  கச்சா எண்ணெய் அதிக அளவில் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். குறிப்பாக, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. அதனால் வரும் 1 ம் தேதியில் இருந்து ஈரான் சப்ளை இல்லாவிட்டாலு ம், எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிகிறது.

சவுதிக்கு லாபம்

ஈரான் மீதான தடையால், மற்ற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் சப்ளையில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்து கொள்ள சவூதி அரேபியா தயாராக உள்ளது. அதிக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் முதலிடம் வகிக்கிறது சவூதி என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: