தனியார் பல்கலைகழக பட்டமளிப்பு விழா தாய் மொழி கண் போன்றது ஆங்கிலம் கண் கண்ணாடி போன்றது: துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு

சென்னை: தாய் மொழி கண் போன்றது; ஆங்கிலம், இந்தி கண்ணாடி போன்றது. எனவே தமிழ் ெமாழிக்க அனைவரும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேசினார்.  சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நேற்று 9-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.  பின்னர் அவர் மாணவர்களிடையே பேசியதாவது:  தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.  தாய்மொழி என்பது கண் போன்றது. ஆங்கிலம், இந்தி மற்ற மொழிகளில் எல்லாம் கண் கண்ணாடி போன்றது. கண் சரியாக இருந்தால் மட்டுமே பிற மொழிகள் மூலம் பேச முடியும்.

ஆகையால் தாய்மொழியை மறக்கக் கூடாது. கல்வி அறிவு அளிக்கும் ஆசிரியர்களுக்கு மதிப்பளியுங்கள்.  அனைத்து நாடுகளின் கவனம் தற்போது இந்தியாவை நோக்கி திரும்பி உள்ளது. மூடிஸ் ரேட்டிங்கிங் உலகில் 3-வது வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா விரைவில் மாறும். புதிய தொழில்நுட்பம் எளிய பயன்பாட்டுடன் சாதாரண மக்களுக்கும் செல்ல வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம்.  சமூக வலைதளம் இன்றைய இளைஞர்களின் மன அழுத்தத்தை ஏற்படுத்தி தற்கொலைக்கே கொண்டு செல்கிறது. எனவே இன்டர்நெட் மற்றும் மொபைல் போன் உபயோகத்தை இளைஞர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: