சித்து பிரசாரத்துக்கு 3 நாள் தடை

புதுடெல்லி: பீகார் மாநிலம் கைத்தார் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய சித்து, ‘‘வாக்காளர்கள் (குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) ஒன்றிணைந்து வாக்களித்து, பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டும்’’ என்று பேசினார். இவரது பேச்சு தேர்தல் நடத்தை விதிமீறல் என்ற புகார் எழுந்தது. மத ரீதியான பிரசாரங்கள் தடை விதிக்கப்பட்ட ஒன்றாகும். அதன் அடிப்படையில் சித்துவிடம் விளக்கம் கேட்டு அவருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. இந்நிலையில், தற்போது அவருக்கு பிரசாரம் மேற்கொள்ள 72 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: