அப்படியே ஸ்டிரைட்டா... எம்பி ஆகணும்ல: பாஜ.வில் இணைந்த நடிகர் சன்னி தியோல்

பாலிவுட் நடிகர் சன்னி தியோல் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் நேற்று பாஜவில் தன்னை இணைத்து கொண்டார். பிரபல பாலிவுட் நடிகர் ஷன்னி தியோல். இவரது தந்தை நடிகர் தர்மேந்திரா. மதுரா தொகுதியில் போட்டியிடும் நடிகை பாஜ வேட்பாளர் ஹேமாமாலினி, சன்னி தியோலின் சித்தி ஆவார். கடந்த வாரம் புனே விமான நிலையத்தில் பாஜ தலைவர் அமித்ஷாவை ஷன்னி தியோல் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து நேற்று டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் பாஜவில் இணைந்தார். பின்னர் அவர் கூறுகையில், “எனது தந்தையும் நடிகருமான தர்மேந்திரா வாஜ்பாயுடன் நெருக்கமாக இருந்தார். இன்று நான் மோடியு டன் இணைந்துள்ளேன்” என்றார். இதற்கிடையே, குருதாஸ்பூர் தொகுதி பாஜ வேட்பாளராக நேற்று இரவு அவர் அறிவிக்கப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: