தென்காசி ஜவுளிக்கடையில் தீ விபத்து

தென்காசி: நெல்லை மாவட்டம், தென்காசி அம்மன் சன்னதி பஜாரில் பிரபல ஜவுளி கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கடையை பூட்டி விட்டுச் சென்றனர். அதிகாலை 1 மணியளவில் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதுகுறித்த தகவலின்பேரில், தென்காசி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் கோடிக்கணக்கில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தென்காசி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: