சாமி சிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால் தமிழகத்தில் கோயில்களை மூடலாமா? அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி, மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

சென்னை:  சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் பி.ஜெகந்நாத் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  தமிழகத்தில் இருந்து  ராஜேந்திர சோழன், ராஜராஜ சோழன் ஆட்சி காலங்களில் வெளியிடப்பட்ட செம்பு பட்டயங்கள், சிவன் சிலைகள், விஷ்ணு சிலைகள், சோழர்கள் சிலைகள் அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. இவற்றை மீட்டு, தமிழகம் கொண்டு வரவேண்டும். அதற்காக, மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கொண்ட சிறப்பு கூட்டு மீட்புக் குழுவை அமைத்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் பதிலளிக்குமாறு, மத்திய கலாச்சார துறை, மத்திய தொல்லியல் துறை, மத்திய வெளியுறவுத்துறை மற்றும் தமிழக அரசுக்கு  உத்தரவிட்டனர்.

 இந்த வழக்கு விசாரணையின்போது சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் ஆஜராகி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், நிதி ஒதுக்கீடு தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்றார்.  அதற்கு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியன், இதுதொடர்பான அரசாணை  ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும். சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ஏற்கனவே பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு தேவையானவற்றை தெரிவித்தால் அரசு நிறைவேற்றும் என்று கூறினார்.   இதையடுத்து, விருதுநகர் மாவட்டம், திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் இருந்த 1,300 ஆண்டுகள் பழமையான மயில் சிலை காணாமல் போனது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.

 அப்போது, அந்த கோயில் நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீலிடம் நீதிபதிகள், யாருடைய உத்தரவையும் பெறாமல் சிலையை அகற்றியது ஏன் என்று சரமாரி கேள்வி கேட்டனர். மேலும், சிலையை அகற்றியவர்கள் மீது அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கோயில்களுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மூலம் தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அப்படி இருக்கும்போது, சாமி சிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால், தமிழக அரசு இந்து கோயில்களை மூடி விடலாமே? என்றனர்.  மேலும், கோயில் சிலைகளை பாதுகாக்க இடம் தேர்வு செய்யப்பட்டதா, பழங்கால சிலைகள் பாதுகாப்பில்லாமல் வெயிலில் வைக்கப்பட்டுள்ளன என்று அரசுத் தரப்பு வக்கீலிடம் கேட்டனர். அதற்கு அரசுத் தரப்பு வக்கீல் ஆர்.ஏ.புரத்தில் 5 கிரவுண்ட் இடம் உள்ளது என்றார். இடம் தேர்வு, கட்டுமானப் பணிகள் ஆகியவை குறித்து அடுத்த விசாரணையின்போது தெரிவிக்க வேண்டும் என்று கூறி விசாரணையை வரும் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தன

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: