சிக்னல் கோளாறு காரணமாக வேளச்சேரி-பெருங்குடி இடையே நடுவழியில் ரயில்கள் நிறுத்தம்

சென்னை: வேளச்சேரி-பெருங்குடி இடையே திடீர் சிக்னல் கோளாறு காரணமாக சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடுவழியில் ரயில்கள் நிறுத்தப்பட்டது. கடற்கரையில் இருந்து நேற்று இரவு 8 மணியளவில் வேளச்சேரிக்கு புறநகர் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது ரயில் பெருங்குடி ரயில் நிலையத்திற்கு வந்து வேளச்சேரிக்கு செல்லும் போது திடீரென சிக்னலில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, ரயில்களை மேற்கொண்டு இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர், கட்டுப்பாட்டு அறைக்கு ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். தகவலை அறிந்த ரயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் விரைந்துவந்து சிக்னல் கோளாரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Advertising
Advertising

இதனால், பெருங்குடியில் இருந்து வேளச்சேரி செல்லும் வழியில் 3 ரயில்கள் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டது. அதேபோல், கடற்கரையில் இருந்து வேளச்சேரி நோக்கி வந்த ரயில்களும் குறிப்பட்ட ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர். நீண்ட நேரமாகியும் கோளாறு சரிசெய்யப்படாததால் கடுப்பாகி போன பயணிகள் வேளச்சேரி- பெருங்குடி இடையிலான தண்டவாளத்திலேயே பாதுகாப்பற்ற நிலையில் செல்போன் வெளிச்ச உதவியுடன் நடந்து சென்றனர்.  ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடு வழியில் ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: