தமிழக வனத்துறையில் 564 வனக்காவலர் பணியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

சேலம்: தமிழக வனத்துறையில் 564 வனக்காவலர் பணியிடத்திற்கு ஆன்லைனில் மே முதல் வாரம் முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வனத்துறையில் காலியாக இருந்த வனவர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனவர் பணியிடங்கள் சமீபத்தில் நிரப்பப்பட்டது. தற்போது, காலியாக உள்ள வனக்காவலர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில், பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் பி்ரிவினரை கொண்டு 465 காலிப்பணியிடமும், தனியாக மலைவாழ் இனத்தவரைக்கொண்டு 99 காலிப்பணியிடமும் நிரப்பப்படவுள்ளது. 10ம் வகுப்பு கல்வித்தகுதி கொண்டிருக்க வேண்டும். பொது பிரிவினருக்கு வயது தகுதியாக 1.7.2019ம் தேதியில் 21 முதல் 30க்குள்ளும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், சீர் மரபினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 21 முதல் 35க்குள்ளும், முன்னாள் ராணுவத்தினருக்கு 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

Advertising
Advertising

திருநங்கைகளுக்கு உரிய சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. உடற்தகுதியாக ஆண்கள் 163 செ.மீ. உயரமும், பெண்கள், திருநங்கைகள் 150 செ.மீ. உயரமும் இருத்தல் வேண்டும். இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் மே முதல் வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மே மூன்றாவது வாரம் விண்ணப்பிக்க கடைசி நாளாகும். கணினி மூலம் ஆன்லைன் எழுத்துத்தேர்வு ஜூன் 4வது வாரத்தில் நடக்கிறது. 100 மதிப்பெண்ணுக்கு 3 மணி நேரம் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக தகவல்களை அறிய www.forests.tn.gov.in என்ற முகவரியில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: