தொழில் மற்றும் வணிகவரித்துறை உதவியாளர் தேர்வர்கள் மூலச்சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும்: டிஎன்பிஎஸ்சி வேண்டுகோள்

சென்னை: “தொழில் மற்றும் வணிகவரித்துறை விலை மதிப்பீடு உதவியாளர் பதவிக்கு தற்காலிகமாக தேர்வானவர்கள் மூலச்சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்” என டிஎன்பிஎஸ்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு:

2016-17ம் ஆண்டிற்கான, தமிழ்நாடு அமைச்சுப் பணிகளில் அடங்கிய தொழில் மற்றும் வணிகத் துறைக்கான விலை மதிப்பீட்டு  உதவியாளர் பதவிக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின்  பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்கள் சரி பார்ப்பிற்காக 25ம் தேதி (நாளை) முதல் மே 3ம் தேதி  மாலை 5.30 மணிக்கு முன்னர் தங்களது மூலச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை மேற்குறிப்பிட்ட நாளுக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவ்விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வில் கலந்து கொள்ள விருப்பமில்லை எனக் கருதி அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது, அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: